முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி இன்று ட்விட்டரில் இன்று பலரும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அதில் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் திமுக மாநில தன்னாட்சிக்கு உயிரூட்ட 161 வது பிரிவின்படி தீர்மானம் நிறைவேற்றி எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.