Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! குழப்பங்கள் நீங்கும்….! சுகங்கள் வந்து சேரும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! மனக்குழப்பங்கள் தீர்ந்துவிடும்.

இன்றைய நாளில் சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். சுற்றத்தார்களின் உதவி கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடும். மனக்குழப்பங்கள் சரியாகிவிடும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். அடுத்தவர்களின் கடனுக்கு பொறுப்பு ஏற்க வேண்டாம். எந்த ஒரு காரியமும் மந்தமாக தான் நடக்கும் நிதானமாக பேச வேண்டும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். நிதானமான போக்கைக் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகளுடைய விஷயத்தில் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம்.

காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை பெரிதுபடுத்த வேண்டாம். மாணவர்கள் கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கொள்ள முடியும். கல்விக்காக நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் தெளிவு பிறக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம் 

Categories

Tech |