மகரம் ராசி அன்பர்களே.! கவனமாக செயல்பட வேண்டும்.
இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இட மாற்றம் வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணங்கள் தோன்றும். காரியத்தை உங்களால் சிறப்பாக செய்ய முடியும். எந்த ஒரு காரியத்தை கொடுத்தாலும் அதனை நல்லபடியாக உங்களால் முடிக்க முடியும். இலட்சிய நோக்கோடு உங்களது பயணம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல் துறையில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் அதிகமாகும். மற்றவர்களால் மனக்கசப்பு இருக்கும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். உத்தியோகத்தில் உயரமான சூழ்நிலைக்கு செல்வீர்கள்.
நிதானமாக செயல்பட வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். வழக்குகளை ஒத்திப் போட்டுக் கொள்ளுங்கள். காதலிப்பவர்கள் அவசரப்பட வேண்டாம். காதலை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை வேண்டும். கல்விக்காக கடுமையாக உழைக்க வேண்டும். நிலைமையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு