Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்… பேரரசு கருத்து…!!!

தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக வைக்கவேண்டும் என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக இந்து சமயம் அறநிலை துறை அமைச்சர் ஆலோசனை நடைபெறுவது வரவேற்கத்தக்கது.

இது நம் நாட்டில் தமிழை கோலூன்ற வேண்டும் என்பதற்கான சிறந்த முயற்சி. இதேபோன்று நம் அரசு அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக இருக்க வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் தமிழ் பாடம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஆகும். இதையும் ஆலோசனை செய்ய வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பம் என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |