Categories
தேசிய செய்திகள்

ஆண்களைக் காட்டிலும்…. பெண்களிடம் ஆர்வம் குறைவு….!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆண்களை காட்டிலும் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை அந்தந்த மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பலர் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளுவதில், ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை 1000 ஆண்களுக்கு 854 பெண்களே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை 1000 ஆண்களுக்கு 746 பெண்களும், பீகார் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 810 பெண்களும், காஷ்மீர் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 711 பெண்களும், டெல்லியில் 1000 ஆண்களுக்கு, 722 பெண்களும் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |