அமெரிக்கா கோவேக்ஸ் திட்டத்திற்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்குவதில் ஒரு பங்கு இந்தியாவிற்கு கிடைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி சம அளவில் கிடைப்பதற்காக ஐ.நா ஆதரவுடன் கோவேக்ஸ் சென்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் உலக சுகாதார நிறுவனமும், அதனுடைய கூட்டாளி அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து செயல்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்கா கோவேக்ஸ் திட்டத்திற்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. இந்த 8 கோடி தடுப்பூசிகளில் ஒருபங்கு இந்தியாவிற்கு கிடைக்கப்பெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, இந்தியாவிற்கு இதுவரை கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் சுமார் 60 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நன்கொடையாக சுமார் 400 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.