Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் வருவதை கண்டு… தப்பியோடிய நபர்… 300லிட்டர் சாராய ஊறலை அழித்த அதிகாரி..

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள புதுவெங்கரை அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் குழந்தைவேல் என்பவர் அவரது  விவசாய தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக பரமத்திவேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை செய்துள்ளனர். அப்போது குழந்தைவேல் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் சாராயம் காய்ச்சுவது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வருவதை கண்ட குழந்தைவேல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் அங்கிருந்த அவரது நண்பரான கள்ளிபாளையத்தை சேர்ந்த சசிமணியை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 18 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 300லிட்டர் சாராய ஊறலையும் அளித்துள்ளனர்.

Categories

Tech |