Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |