கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் பிளிப்கார்ட் தனது பிக் சேமிப்பு தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சாம்சங், ஆசஸ் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பல ஸ்மார்ட் போன்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்க இருக்கிறது. இது மட்டுமன்றி கேஷ்பேக் மற்றும் வங்கி சலுகைகளையும் வழங்க உள்ளது.