Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி…! இரண்டாம் நாள் ஆட்ட முடிவில்….நியூசிலாந்து 229 ரன்கள் குவிப்பு …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில்  முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர்    நடந்து வருகிறது. இதில்  லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில்  2 வது டெஸ்ட் போட்டி  பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 101 ஓவர்களில்  இங்கிலாந்து அணி 303 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக  மார்க் வுட் 41 ரன்கள் டேனியல் லாரன்ஸ் 81 ரன்களில்  ஆட்டமிழந்தார் .

இதன் பிறகு நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டாம் லாதம், டேவன் கான்வே  ஜோடி களமிறங்கினர். இதில் டாம்  லாதம் 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்ததாக வில் யங்,  கான்வேயுடன் இணைந்தார். இருவரின் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர்  137 ஆக இருந்தபோது டேவன் கான்வே 80 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வில் யங் 82 ரன்களில்  வெளியேறினார். இறுதியாக 2 ம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 76.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து  229 ரன்களை குவித்துள்ளது. ராஸ் டெய்லர் 46 ரன்களுடன்  களத்தில் உள்ளார் .

Categories

Tech |