தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழகத்திலேயே தடுப்புசி உற்பத்திக்கு மாத்தி கொடுக்க மத்திய அரசை வலியுறுத்தினார். பாதிப்பு அதிகமுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் கொரோனா வார்டுக்கு கவச உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தார். இவ்வாறு திமுக அரசின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கூட பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்யவேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீரில் தான் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாவிட்டால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தேவையான அளவு காவிரியில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.