நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 8ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த ஊரடங்கை ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ஏழு மாவட்டங்களில் இருக்கும் ஊரடங்கினை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று குறையாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்திற்கு எந்த தடையுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.