நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேவ்தத் படிக்கல், ருத்ராஜ், சேத்தன் சகாரியா உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் யாக்கர் புயல் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய அவர், தற்போது குணமாகி வீட்டில் பயிற்சி செய்து வருகிறார். அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.