இமயமலையில் இருந்து விஞ்ஞானிகள் பிரம்மாண்டமான இரண்டு புதிய பறக்கும் அணில் வகைகளை கண்டுபிடித்துள்ளனர். பறக்கும் அணில் உலகின் மிக அரிதான மற்றும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பறக்கும் அணில் வகை இருப்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அதை ஹை ஹிமாலயாஸில் (high Himalayas) ஆஸ்திரேலியா மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் அறிவியல் பெயர் யூபெடாரஸ் சினிரியஸ் (Eupetaurus cinereus) ஆகும். இது “கம்பளி பறக்கும் அணில்” (woolly flying squirrel) என்றும் அழைக்கப்படுகிறது. அந்த இரண்டு பறக்கும் அணில்களும் பூனைகள் போன்ற அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.