நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு சில கணவன், மனைவி உயிரிழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பெற்றோர்களை இழந்து வாடுகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றது.
இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் செல்போன்கள் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை முடிவு செய்துள்ளது. இந்த எண்களை கொண்டு அந்த குழந்தைகள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும். யாரை தொடர்பு கொள்ள வேண்டும், எப்பொழுது அதிகாரிகள் தொடர்பு கொள்ள வேண்டும்? என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.