அரசு மானியங்கள் பெறுவதற்கு பயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணம் விவசாய அட்டை. இந்த அட்டையை பெற ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
புகைப்படம்
குடும்ப அட்டை எண்
ஆதார் அட்டை எண்
பான் கார்டு எண்
விவசாய கிரெடிட் கார்ட்
ஓட்டுநர் உரிமம் எண்
வங்கி கணக்கு புத்தகம்
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx என்ற இணையதளத்தை Open செய்ததும், முகப்பு பகுதியில் Farmer Registration என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் New User என்ற ஆப்சனை கிளிக் செய்யவேண்டும்.
அப்போது விண்ணப்பப்படிவம் ஒன்று கிடைக்கும். அதில் விண்ணப்பதாரரின் விவரங்களை நிரப்ப வேண்டும். அடுத்ததாக விண்ணப்பதாரரின் அடையாள அட்டை எண் மற்றும் பிற விவரங்கள் கேட்கும். அவற்றையும் நிரப்பவேண்டும். அடுத்ததாக புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். கொடுக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்த பின்னர் சப்மிட் ஆப்சனை கிளிக் செய்யவேண்டும்.