சீன நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமான நாஞ்சிங் பல்கலைக்கழகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
சீன நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வின் போது மாணவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் சார்பில் சமூக வலைதளங்களில் பெண்களை பயன்படுத்தி விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் இரண்டு புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது அந்த புகைப்படங்களில் ஒரு பெண் “நான் உங்கள் இளமையில் ஒரு அங்கமாக மாற விரும்புகிறீர்களா” என்றும் மற்றொருவர் “காலை முதல் இரவு வரை என்னுடன் நூலகத்திலேயே இருக்க ஆசைப்படுகிறீர்களா” என்றும் கூறும் வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த விளம்பரம் பலருக்கு மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு சமூக வலைத்தளங்களில் அனைவராலும் கண்டிக்கப்பட்டு வந்துள்ளது.
அதிலும் ஒருவர் “இவ்வாறு அழகான பெண்களையும், சூடான ஆண்களையும் பயன்படுத்தி மாணவ, மாணவிகளின் மத்தியில் ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக கவர்ந்திழுப்பதற்கு பதிலாக நல்ல ஆசிரியர்கள் மற்றும் தனது வளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது.