Categories
உலக செய்திகள்

சர்வதேச பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப்படுமா…? 47வது உச்சிமாநாடு கூட்டம்…. பிரபல நாட்டு பிரதமரின் கருத்து….!!

ஜி7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டத்தின் மூலம் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவது மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு சில முக்கிய தீர்வுகள் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் கார்ன்வால் மகாணத்தில் வைத்து ஜி-7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி-7 நாடுகளின் பிரதமர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைய தலைவரும், கவுன்சில் தலைவரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து மூடப்பட்ட அறைக்குள் ஜி-7 நாடுகளின் பிரதமர்களுடனும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடனும் 47வது உச்சிமாநாட்டு கூட்டம் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதலாக இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியுள்ளார். அதன்பின் ஒவ்வொரு தலைவர்களாக தொடர்ந்து தங்களுடைய உரையை ஆரம்பித்துள்ளார்கள்.

மேலும் இந்த மாநாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பான பலவிதமான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கொரோனாவிற்கு அடுத்த படியாகயிருக்கும் பருவநிலை மாற்றத்திற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |