Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் காவல்துறையினர் நடைக்காவு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து கடையில் இருந்த 18 மது புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடையின் உரிமையாளர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக உதயகுமாரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |