கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் நிகழ்ச்சியில் கலர்பொடி போடப்பட்டிருந்த கருவி திடீரென்று வெடித்ததால் வனப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலை நாடுகளில் ஒரு பெண்ணின் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஆண் குழந்தை என்றால் நீல பொடியையும், பெண் குழந்தை என்றால் இளஞ்சிவப்பு பொடியையும் பலூன்கலில் போட்டு உறவினர்களின் முன்னிலையில் உடைப்பார்கள். அதேசமயம் வசதி படைத்தவர்கள் இந்த கலர் பொடிகளை பெரிய கருவிக்குள் போட்டு அதனை வெடிமருந்து கொண்டு வெடிக்கச் செய்வார்கள்.
இந்நிலையில் ஆல்பர்ட்டாவில் ஒரு குடும்பத்தினர் மேற்கண்ட நிகழ்ச்சியை நடத்தியதில் பெரிய கருவிக்குள் வண்ணப் பொடிகளை போட்டு வெடி பொருட்களின் மூலம் வெடிக்க செய்துள்ளார்கள். ஆனால் அந்த கருவி அதிர்ஷ்டவசமாக வெடித்து சிதறும் போது கலர் பொடியுடன் பயங்கர தீயும் வெளிப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலிருந்த செடி, கொடிகளின் மீது தீப்பற்றியதால், சுமார் ஒரு ஏக்கர் அளவிலான வனப்பகுதி எரிந்து நாசமாகியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்ததோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு 500 டாலர்களையும் அபராதமாக விதித்துள்ளனர். மேலும் ஆல்பர்ட்டா வனத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, எவராவது குழந்தையின் பாலினம் தெரியப்படுத்தும் நிகழ்ச்சியில் வெடி பொருட்களை பயன்படுத்தினால் வனத்துறை அலுவலரின் அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பின்னரே அதனை வேண்டும் என்றுள்ளார்.