தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கொரோனா விழிப்புணர்வு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் அலைபேசி வாயிலாக அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால் அவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வருவதால் மக்கள் புரிந்து கொள்ள சிரமம் ஏற்படுகிறது என்று தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அதை தமிழில் வெளியிட தொலைத் தொடர்புத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.