சிங்கம்-2 திரைப்பட பாணியில் தூத்துகுடி கடலோரப் பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜோனாதன் தோர்ன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது கடலோர பகுதியில் வெளிநாட்டு நபர் ஒருவர் சுற்றித்திரிவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மாஸ்டர் மைண்ட் ஆக செயல்பட்டு வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.