Categories
உலக செய்திகள்

அபாய பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடுகள்… ஜெர்மனி அதிரடி முடிவு… வெளியான முக்கிய தகவல்..!!

கொரோனா அபாய நாடுகளாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டியலில் இருந்து ஜெர்மனி தற்போது கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ராபர்ட் கோச் நிறுவனம் கொரோனா அபாய நாடுகளின் பட்டியலில் இருந்து ஜெர்மனி தற்போது கனடா, ஆஸ்திரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நீக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளும், 19 நாடுகளும் இனி கொரோனா அபாய நாடுகளாக கருதப்படாது என்று தெரிவித்துள்ளது.

அந்த 19 நாடுகளாவன ஆஸ்திரியா, போஸ்னியா, அர்மீனியா, கனடா, அஜர்பைஜான், ஹெர்செகோவினா, மால்டோவா, கொசோவா, லெபனான், சைப்ரஸ், செர்பியா, வடக்கு மாசிடோனியா, உக்ரைன், மாண்டினெக்ரோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆகும்.

அத்துடன் குரோவேஷியா, நார்வே, சுவிட்சர்லாந்து, கிரீஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட பகுதிகளும் ஜெர்மனியால் இனி கொரோனா அபாய நாடாக கருதப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புகள் வருகின்ற 13-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |