Categories
தேசிய செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு…. தலா ரூ.5000 நிதியுதவி…. ராஜஸ்தான் முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றன. இந்த ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்ட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் பல மாநில அரசுகளும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2000 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |