சான் பிரான்சிஸ்கோவில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கல் சிற்பங்கள் அதன் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் புலனாய்வாளர்கள் பல வருடங்களாக, கலை சிற்பங்கள் கடத்தப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்தி வந்தனர். அதன் படி தற்போது 3.8 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இந்து, புத்த சிலைகள் என்று பழங்காலத்து சிற்பங்கள் 27 கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சிவன் சிலையும் உள்ளது. இந்நிலையில் கம்போடியாவின் நுண்கலை மற்றும் கலாச்சார அமைச்சரான ஃபியூங் சக்கோனா இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கைப்பற்றப்பட்டுள்ள இந்த சிலைகள் எங்கள் நாட்டின் முன்னோர்களுடைய மாயமான ஆன்மாக்கள் என்று தெரிவித்துள்ளார்.
மன்ஹாட்டன் தொல்பொருள் கடத்தல் பிரிவும், உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைகளும் விசாரணை நடத்திய பின்பு ஏறக்குறைய கம்போடியாவின் 400 பொருட்கள் 10 நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோவின் அருங்காட்சியகத்தில் கடந்தவாரம் காட்சிக்காக கல் சிற்பங்கள் சில வைக்கப்பட்டிருந்தன.
அவை அனைத்தும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல யுகங்களுக்கு முன்பாக தாய்லாந்து நாட்டிலிருந்து இந்த சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள மணற்கல் லிண்டல்கள் மற்றும் கைகளால் செதுக்கிய மத கலைப்பொருட்கள் 2 போன்றவை உள்ளது. அதாவது தாய்லாந்திலிருந்து, ஏறக்குறைய 1,500 பவுண்டுகள் எடையுடைய தொல்பொருட்கள் கொள்ளையடித்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.