ஆப்பிள் அல்வா
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் – 1
பால்கோவா- 1/4 கப்
சர்க்கரை – 1/4 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய்தூள் – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 10
பாதாம் – 5
செய்முறை:
முதலில் ஆப்பிளை துருவிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் நெய் ஊற்றி , பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து ஆப்பிளை சேர்த்து , சிறு தீயில் வைத்து நன்கு கிளற வேண்டும் . பின் இதனுடன் கோவா, சர்க்கரை சேர்த்து கிளறி , சுண்டி வரும் போது முந்திரி, பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஆப்பிள் அல்வா தயார் !!!