Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்த பாதிப்பும் ஏற்படாது…. நீங்கள் கண்டிப்பா செலுத்தனும்…. விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்….!!

மலைவாழ் மக்கள் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து கலெக்டர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அடுத்த கோதையாறு, குற்றியாறு தச்சமலை, மோதிரமலை போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து மலைவாழ் மக்களிடையே தடுப்பூசி குறித்து ஏற்பட்டுள்ள பயத்தை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொரோனா தடுப்புப் பணிகளை பார்வையிடவும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் மூக்கறைக்கல், மோதிரமலை, மாங்காமலை, குற்றியாறு, முடவன்பொற்றை, தச்சை மலை போன்ற பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து மலைவாழ் மக்களிடம் தடுப்பூசி செலுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கலெக்டர் அரவிந்த் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் கூறியபோது மலையோர பகுதிகளில் சுகாதாரத் துறையுடன் தன்னார்வலர்கள், தனியார் சமூக அமைப்புகள் இணைந்து வீடு வீடாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் வந்ததும் முதற்கட்டமாக மலைவாழ் மக்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து 500 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மழைக்காலம் முடிந்ததும் மலையோர பகுதி சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அரவிந்த் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |