Categories
உலக செய்திகள்

குவியலாக கிடக்கும் மண்டை ஓடுகள்…. திடுக்கிட வைக்கும் உலக வரலாறு…. ஆய்வில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

நதிக்கரையில் குவியலாக மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்து நாட்டின் முன்னாள் ஆஷ்விட்ஸ் வதை முகாம் அருகே சோலா நதிக்கரை அமைந்துள்ளது. இந்த நதியின் கரையோரத்தில் 12 மண்டை ஓடுகளையும் எலும்பு கூடுகளையும் உள்ளூர் மக்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளும், சிறப்பு அதிகாரிகளும் விசாரணை செய்வதற்கு தொடங்கியுள்ளனர். இதனையடுத்து 1939 ல் ஜெர்மனிய நாஜி படைகள் 2 ஆம் உலகப்போரின்போது போலந்தின் பல பகுதிகளை கைப்பற்றி வதை முகாம்களை அமைத்துள்ளது.

இந்த முகாம்களில் வைத்து நாஜி படைகள் யூதர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இவர்களுடைய சடலங்களை குவியலாக சோலா நதிக்கரையில் புதைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் படுகொலை செய்யப்பட்ட யூதர்களுடையதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர்.

Categories

Tech |