மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்த காரணத்தினால் கணவன் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் ஆதிரா என்ற ஜோடிகள் திருமணமாகாமல் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மனைவி ஆதிரா கணவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இதை பார்த்த கணவன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் சண்டை முற்றவே மண்ணெண்ணையை எடுத்து ஆதிரா மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி உள்ளார்.
அப்போது ஷாநவாஸ் அருகில் இருந்ததால் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஆதிரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 40 சதவீத காயத்துடன் ஷாநவாஸ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஆதிராவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.