Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை மீறிய தோல் தொழிற்சாலை…. திடீரென நடந்த விபரீதம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கி வந்த தோல் தொழிற்சாலை தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- கச்சேரி ரோட்டில் அப்துல் ரசாக் என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இருக்கின்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் திடீரென ஆட்டோ ஸ்ப்ரே பாய்லரில் தீப்பற்றி மேற்கூரைக்கு பரவியது. இதனால் தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் அணைக்க முடியாமல் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின்படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தொழிசாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தொழிற்சாலை முழுவதும் தீ அணைப்பான் கருவி போன்ற உபகரணங்களை சரியாகப் பயன்படுத்தாத காரணத்தாலும் தீ பரவியது என்றும் ஊரடங்கு உத்தரவை மீறி தொழிற்சாலை செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தாசில்தார் மோகன் தலைமையில் அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |