நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள மெமரீஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் வெற்றி. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வெற்றி இயக்குனர் வீ.ஜே.கோபிநாத் இயக்கத்தில் ஜீவி படத்தில் நடித்திருந்தார். இந்த திரில்லர் திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Here's the teaser of latest suspense thriller #Memories https://t.co/lJqObn7hxr#MemoriesTeaser @SyamPraveen2 @act_vetri @Shijuthameens @Avinash_heat@sanlokesh @thilak_ramesh @ajayanwordstar @LahariMusic @PRO_Priya
— LahaRRRi Music (@LahariMusic) June 11, 2021
இந்நிலையில் நடிகர் வெற்றி அடுத்ததாக மெமரீஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஷ்யாம் பிரவீன் இயக்கியுள்ள இந்த படத்தை ஷிஜுதமின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கவாஸ்கர் அபினாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மெமரீஸ் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.