பணம் தரவில்லை என்றால் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் நவீன் குமார் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தனது கல்லூரியில் படிக்கும் தோழியின் ஆபாச புகைப்படத்தை கடந்த 5-ஆம் தேதி அவரது சகோதரருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி அடைந்து நவீன்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனக்கு 55 லட்ச ரூபாய் தரவில்லை என்றால் உனது சகோதரியின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நவீன் குமார் தான் தோழியின் ஆபாச புகைப்படங்களை எடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் நவீன்குமார் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும், தனக்கு பணத் தேவை அதிகரித்ததால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின்நவீன் குமாரின் செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.