Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாரும் ரெடியா இருங்க… டோக்கன் வழங்கும் பணி தீவிரம்… அதிகாரிகளின் அறிவுரை…!!

14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரணத்தொகை பெறுவதற்கென பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியானது தீவிரமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிவாரண தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பை விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து முதல்கட்டமாக 2000 ரூபாய் கடந்த மாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு, ஜூன் 11 ஆம் தேதி முதல் 14ம் தேதிக்குள் டோக்கன்களை பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்படும். அதன்பின் ஜுன் 15 ஆம் தேதி முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் பணம் வழங்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் படி தற்போது சேலம் மாவட்டத்தில் 1,591 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்து 49 ஆயிரம் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜுன் 11ஆம் தேதி முதல் ரேஷன் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்கள் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பணியானது 2 முதல் 3 நாட்களில் நிறைவு அடையும். மேலும் ஜுன் 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும். இதனை பொதுமக்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |