Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: டாஸ்மாக் -திறப்பு முதல்வர் ஸ்டாலின் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத் துறையில் தமிழகம் சாதனை படைக்கும் என்றும், தமிழகத்துக்கு தடுப்பூசி அதிக அளவு அளவில் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா குறைந்ததால் தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |