தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில், அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய்த்தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படும்போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த அறிகுறிகளோடு அதிக அளவில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது.
இதனைததொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்தியில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.