துவரம் பருப்பு தோசை
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – 2 கப்
துவரம்பருப்பு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி, தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு எடுத்தால் சூப்பரான துவரம் பருப்பு தோசை தயார் !!!