Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போடலனா”…. ‘அடுத்து இதுதான் நடக்கும்’ ….’மக்களை எச்சரிக்கும் பிரபல நாடு’ …!!!

கொரோனா  தடுப்பூசி செலுத்தி  கொள்ளாத மக்களின் சிம் கார்டுகளின்  இணைப்புகள் முடக்கப்படும் என்று  சுகாதார துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தி கொள்வதே ஒரே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானில்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் .

இதனை தொடர்ந்து தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும் மக்கள் முன்வராததால் பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டும் மக்களின் சிம்கார்டு இணைப்புகள் முடக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா  தடுப்பூசிகள்  போடப்பட்டு  வருகின்றது.இதுவரை அங்கு  95,59,910 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு  செலுத்தப்பட்டுள்ளது.அங்குள்ள  மொத்த மக்கள் தொகையில் 1.2 சதவீதம் மக்கள் முழுமையாக 2 டோஸ்  தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |