அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் அரசு வங்கிக்கு தாசில்தார் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுகிறது. இது குறித்து தாசில்தார் காமாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு அரசு வங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதை வருவாய்த்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் இரு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்ததோடு விசாரணை மேற்கொண்டு அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.