Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வாங்குபவர்களுக்கு… ஒரு நல்ல செய்தி…. அறிமுகமாகும் புதிய வசதி…!!!

எல்பிஜி தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகிஸ்தர் தேர்வு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எல்பிஜி சிலிண்டரை நாம் பதிவு செய்யும் போது எந்த நிறுவனத்திடம் இருந்து வேண்டுமானாலும் நாம் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என எல்பிஜி போர்டபிளிட்டி வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனை முதற்கட்டமாக சண்டிகர், கோயம்புத்தூர், ராஞ்சி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்த வசதியை தொடங்குவதற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்கலிருந்து எல்பிஜி சிலிண்டர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதில் பல சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அரசின் இந்த முடிவு இவர்கள் அனைவருக்கும் ஒரு உதவியாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி மறுநிரப்பல்களை உமாங் பயன்பாடு, பாரத் சிஸ்டம் மற்றும் மற்ற தளங்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம். மேலும் வரை முன்பதிவு செய்து ஈ-காமர்ஸ் பயன்பாடுகள் மூலம் பணம் செலுத்தலாம். அதாவது பேடிஎம் போன்ற தளங்களிலும் நாம் பணம் செலுத்தி கொல்ல முடியும்.

Categories

Tech |