சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் நீண்ட நேரமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் வசிக்கும் கணேஷ்குமார், சபரி ஆனந்த், மனோஜ் மற்றும் குட்டி ராஜ் என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.