Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குற்றங்கள்… போலீசார் ரோந்து… கஞ்சா விற்ற 3 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வி.கே.புரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள டாணாவில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், ரகுபதி பாண்டியன், சுதாகர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1 1/2 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |