தம்பதியினரை வழிமறித்து 2 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டினாயணபள்ளி பகுதியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒப்பதவடி கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் தயாநிதியின் பையிலிருந்த செல்போனை பறித்ததோடு, மஞ்சுளாவை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.