போதையில் நான்கு நண்பர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகில் இருக்கும் பாரதி நகர் பகுதியில் அருண் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அருண் தனது நண்பர்களான சாய், முகமது, நிஜாம், முபாரக் ஆகியோருடன் மாலை நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, போதையில் இருக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக கோபத்தில் அருணை அரிவாளால் வெட்டி கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.