Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர்.

இந்த விசாரணையில் அவர் முனிஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் முனிஸ்வரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் முனீஸ்வரன் தனது நான்கு நண்பர்களின் உதவியுடன் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் இருந்து மதுரைக்கு 25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர்.

மேலும் அதனை போடி லைன் பகுதியில் உள்ள முட்புதருக்குள் மறைத்து வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முனீஸ்வரனுக்கு உதவிய நண்பர்களான சிவ பாலகிருஷ்ணன், சுதர்சன், இப்ராஹீம் ஷா, செல்லப்பாண்டி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |