மின்கம்பம் அறுந்து விழுந்து பசுமாடு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒலக்காசி கிராமத்தில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் இருக்கும் விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி கஸ்தூரி தனது பசுமாட்டை வேப்பூர் ஆற்றோரம் உள்ள ரகு என்பவரது விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
அப்போது அந்த நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் மின்கம்பம் மீது விழுந்ததால் மின்கம்பம் அறுந்து வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மீது விழுந்துள்ளது. இதனால் பசுமாடு மின்சாரம் தாக்கி துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.