Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி வந்துச்சு…. ரொம்ப குழப்பமா இருக்கு…. கருவூலத்தில் ஒப்படைப்பு….!!

குடியாத்தம் அருகில் காளியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் வைத்துச் சென்ற ஐம்பொன் சிலையால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா காளியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு சுமார் 10 அடி உயரத்திற்கு காளியம்மன் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பிச்சனூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தினசரி காலை மாலை என இருவேளைகளிலும் பூஜை செய்து வருவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதியில் கோவிலில் நடந்த இரண்டு திருமணங்கள் முடிந்தபின் புருஷோத்தமன் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது காளியம்மன் சிலை அருகில் 12 கிலோ ஐம்பொன்னாலான அம்மன் சிலை ஒன்று இருந்தது.

அந்த சிலையை யாரோ மர்மநபர்கள் வைத்துவிட்டு சென்று இருப்பதாக வருவாய் துறையினருக்கு புருஷோத்தமன் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குடியாத்தம் தாசில்தார் வத்சலாவின் உத்தரவின்படி, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் உள்ளிட்ட வருவாய் துறையினர் கோவிலுக்குச் சென்று அங்கிருந்த சுமார் 12 கிலோ எடையுள்ள அம்மன் சிலையை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அதன்பின் அந்த அம்மன் சிலையை குடியாத்தம் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு யாராவது கடத்தி கடனுக்காக ஐம்பொன் சிலையை செய்து வைத்து சென்றார்களா அல்லது வேறு ஏதாவது கோவிலிலிருந்து திருடி வந்து இந்த கோவிலில் வைத்து சென்றார்களா என்று பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |