ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை ரோட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அத்தியாவசியத் தேவையின்றியும், முக கவசம் அணியாமலும் சிலர் இரு சக்கர வாகனங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். இவ்வாறு சுற்றிக் கொண்டிருந்தவர்கள் 6 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்து அவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதேபோன்று சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையில் காவல்துறையினர் கிழக்கு கடற்கரை ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 5 நபர்களை காவல்துறையினர் நிறுத்தி வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.