Categories
தேசிய செய்திகள்

BREAKING: ATM-ல் பணம் எடுக்க இனி…. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் தவிர்த்து பிற வங்கி ஏடிஎம்களில் பெருநகரங்களில் மூன்று முறையும்,ஊரக பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் 5 முறையும் பணம் எடுக்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |