ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து நடத்திவந்த 12 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்