தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 65 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபி 2021-ஆம் ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் 8-வது இடத்தில் உள்ளது. மோகன் லாலின் த்ரிஷ்யம்-2 4 ஆவது இடத்திலும், தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி 5 வது இடத்திலும் உள்ளன.